

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து அக்கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் 4வது முறையாக பிரதமரான பின்னர், ரணில் விக்ரமசிங்கே முதல் வெளிநாட்டுப்பயணமாக நேற்று (திங்கள்கிழமை) இந்தியா வந்தார். 3 நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டுத் தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சக தகவல் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பில், தமிழக மீனவர்கள் பிரச்சினை, ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.