நல்லவர்களும் திறமையானவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

நல்லவர்களும் திறமையானவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
Updated on
1 min read

நல்லவர்களும் திறமையானவர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி கூறியதாவது: அரசியலுக்கு அவப்பெயர் கிடைத்துள்ளது வேதனை தருகிறது. அரசியல் என்றாலே மக்கள் அலறி அடித்து ஓடுகிறார்கள். இதனால் நாட்டுக்குத் தான் அவப்பெயர் வரும். இந்த நிலை மாறவேண்டும்.

அரசியலை கண்டு யாரும் அஞ்சக்கூடாது. வாழ்வின் அனைத் துத்துறையிலும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். ஜனநாயகத்தில் அரசியல்கட்சிகள் முக்கிய அங்கம்வகிப்பவை. எனவே எல்லா துறையிலும் உள்ள நல்லவர்கள், திறமைமிக்கவர்கள் அரசியலில் பங்கேற்பது அவசியம். நல்லவர்கள் அதிக எண்ணிக்கை யில் பங்கேற்றால் நாட்டுக்குத்தான் நல்லது நடக்கும்.

மகாத்மா காந்தி விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய போது எல்லா பிரிவு மக்களும் பங்கேற்றார்கள். அதனால்தான் சுதந்திர போராட்ட இயக்கம் சக்திமிக்கதாக மிரளவைத்தது.

பள்ளிக்கல்வி முடித்துவிட்டு வெளியேறும் மாணவர்கள் ஒட்டு மொத்த குணாதிசயத்தை பிரதிபலிக் கும் வகையில், அவர்களுக்கு நன்னடத்தை சான்று தருவதற்கு பதிலாக அவர்களுக்கு திறன் சான்று வழங்குமாறு மனித ஆற்றல் துறைக்கு உத்தரவிட்டுள்ளோம்.

எல்லா துறைகளிலும் உள்ள திறமைசாலிகள் வாரத்துக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அல்லது ஆண்டுக்கு 100 மணி நேரம்வரை ஒதுக்கி மாணவர்களுக்கு கற்பிக்கலாம். இதன் மூலம் கல்வித்துறை புது வலிவு பெறும்.

தாய் குழந்தைக்கு பிறப்பைத் தருகிறார்; ஆசிரியர் வாழ்க்கையைத் தருகிறார். மருத்துவர் ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றிவிட்டால் அவரது புகைப்படம் செய்தித்தாளில் வருகிறது. ஆனால், ஓர் ஆசிரியர் நூற்றுக்கணக்கான மருத்துவர் களை உருவாக்கினாலும் அவருக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆசிரியர் தினம் என்பது அவர்களை அங்கீகரித்து கவுரவம் அளிப்பதற்காகத்தான். ஒவ்வொரு சிறந்த மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானிக்குப் பின்னால் ஒரு சிறந்த ஆசிரியர் உள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான் ஓர் ஆசிரியராக நினைவுகூரப்படுவதையே விரும் பினார்.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவு நாணயத்தை வெளி யிட்ட அவர், கலா உத்சவ் இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.

டெல்லி மானெக் ஷா கலையரங் கத்தில் நடந்த நிகழ்ச்சியில் டெல்லியிலிருந்து சுமார் 800 மாணவர்கள், 60 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in