Published : 15 Sep 2020 08:15 AM
Last Updated : 15 Sep 2020 08:15 AM

ஒரே பாலின திருமணம் நம் சமூகத்துக்கு விரோதமானது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

ஒரே பாலின ஜோடி திருமணம் செய்து கொள்வது நம் சட்ட அமைப்புக்கு புறம்பானது, நம் சமூகத்துக்கு விரோதமானது என்று மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி அபிஜித் ஐயர் மித்ரா என்பவர் பொதுநல மனு மேற்கொண்டார். அதில் ஹிந்து திருமணச்சட்டத்தின் கீழ் ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்க வேண்டும். இதனை அனுமதிக்க நாடாளுமன்றத்தில் சட்டமியற்ற வேண்டும் என்று என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, திருமணம் நம் பாரம்பரிய சடங்காகும். ஒரே பாலின ஜோடிகல் திருமணம் செய்து கொள்வது சட்ட அமைப்புக்கு புறம்பானது. நம் சமூகத்துக்கு விரோதமானது.

இதற்கு அனுமதியளித்தால் கணவன், மனைவி என்ற குடும்ப அமைப்புக்கு பங்கம் ஏற்படுத்துவதாக அமையும். எனவே இதற்கு மத்திய அரசால் அனுமதி வழங்க இயலாது, என்றார்.

இதனையடுத்து நீதிபதி டி.என். படேல், ‘உலகத்தில் புதுப் புது மாற்றங்கள் நிகழ்கின்றன, எனினும் இந்த மாற்றம் இந்தியாவுக்குப் பொருந்தாது. இந்தத் திருமணத்தைக் கோருபவர்கள் ஏன் நீதிமன்றத்தை அணுகவில்லை. எதற்கு பொதுநலமனுவாக தாக்கல் செய்ய வேண்டும். ஒரேபாலின திருமணத்தை அனுமதிக்காததால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.’ என்று கூறி விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x