Published : 14 Sep 2020 05:49 PM
Last Updated : 14 Sep 2020 05:49 PM

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் 3 மசோதாக்கள்; மக்களவையில் இன்று தாக்கல் 

புதுடெல்லி

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் 3 மசோதாக்கள் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த 2020 ஜூன் 5-ம் பிரகடனம் செய்யப்பட்ட அவசர சட்டத்தை மாற்ற மக்களவையில் இன்று 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விவசாயத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, விவசாயிகளின் வருவாயை பெருக்கும் நோக்கில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகள் உற்பத்தி பொருள் விற்பனை மற்றும் வணிக (மேம்பாடு மற்றம் வசதி) மசோதா, 2020

விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகளின் விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் மசோதா, 2020

அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, 2020

முதல் இரண்டு மசோதாக்களை, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார்.

அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாவை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் பாட்டீல் தான்வே தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்களை தாக்கல் செய்ய சபாநாயகரிடம் அனுமதி கோரிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்த மசோதாவின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள், விவசாயப் பொருட்களின் தடையற்ற வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் என்றும், விவசாயிகள் தங்கள் விருப்பத்துக்கு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் என்றார்.

விவசாயிகளும், வர்த்தகர்களும் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி நேரடியாகவும் சுதந்திரமாக வியாபாரத்தில் ஈடுபடும் சூழலை இந்த மசோதா ஏற்படுத்தும். இதற்கான மின்னனு வர்த்தக கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் எந்த மாநில வியாபாரிகளுடனும் தடையின்றி வர்த்தகம் செய்ய முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x