Published : 14 Sep 2020 05:27 PM
Last Updated : 14 Sep 2020 05:27 PM

கரோனா ஊரடங்கால் 78 ஆயிரம் மரணங்கள் தவிர்ப்பு: ஹர்ஷ வர்த்தன் உரையின் முக்கிய அம்சங்கள் 

புதுடெல்லி

பொது முடக்கத்தின் மூலம் சுமார் 14-29 லட்சம் பாதிப்புகளும், 37-78 ஆயிரம் இறப்புகளும் தவிர்க்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கோவிட் பெருந்தொற்று மற்றும் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்களவை,மாநிலங்களவையில் தாமாக முன் வந்து அறிக்கை ஒன்றை இன்று சமர்ப்பித்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* 2020 செப்டம்பர் 11 வரை, 45,62,414 பாதிப்புகளும் 76.271 இறப்புகளும் இந்தியாவில் பதிவாகியுள்ளன (இறப்புகளின் விகிதம் 1.67%). 35,42,663 (77.65%) பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, உத்திரப் பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம், பீகார், தெலங்கானா, ஒடிஷா, அஸ்ஸாம், கேரளா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான பாதிப்புகளும், இறப்புகளும் பதிவாகியுள்ளன.

* கோவிட்-19 மேலாண்மைக்கான அரசு மற்றும் சமூக ரீதியான அணுகுமுறைகளைத் தொடர்ந்து, பத்து லட்சம் பாதிப்புகளில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 3,328 ஆகவும், பத்து லட்சம் மக்கள் தொகையில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 55 ஆகவும் உள்ளன. உலகளவில் குறைவான விகிதங்களில் இதுவும் ஒன்றாகும்.

* நாட்டில் பதிவாகியுள்ள பாதிப்புகளில் 92% பேருக்கு குறைவான அளிவிலேயே தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வெறும் 5.8% பேருக்கும் மட்டுமே பிராண வாயு சிகிச்சை தேவைப்படுகிறது. 1.7% பேருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.

* மிக அதிக அளவிலான உறுதியோடு இந்திய அரசு கோவிட்-19 சவாலை எதிர்கொண்டது. அரசின் துணிச்சலான முடிவான தேசிய அளவிலான

பொது முடக்கத்தின் மூலம் இந்தியா ஒன்றிணைந்து பெருந்தொற்றை எதிர்கொண்டது. இதன் மூலம் சுமார் 14-29 லட்சம் பாதிப்புகளும், 37-78 ஆயிரம் இறப்புகளும் தவிர்க்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* கடந்த நான்கு மாதங்கள் கூடுதல் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், மனித வளத்தை மேம்படுத்துவதற்கும், தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள், என்-95 முகக்கவசங்கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் தயாரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட்டன.

* ஒட்டுமொத்த நாட்டுமக்களின் சார்பாக, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, சிறந்த தலைமையை வழங்கி வரும் பிரதமர் நரேந்திர மோடியை நான் பாராட்டுகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x