

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கரோனா பெருந்தொற்று காலத்தில் தொடங்கியது. உறுப்பினர்கள் அமரும் இடத்துக்கு முன்னே பிளாஸ்டிக் ஷீல்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 200 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர், முகக்கவசம், சமூக இடைவெளி என்று அவர்கள் வழிமுறைகளைக் கடைப்பிடித்தனர். 30க்கும் மேற்பட்டோர் வருகையாளர் இருப்பிடத்தில் அமர்ந்திருந்தனர்.
லோக்சபா சேம்பரில் உள்ள பெரிய தொலைக்காட்சித் திரை சில உறுப்பினர்கள் மட்டுமே இருக்கையில் இருப்பதைக் காட்டியத்.
பொதுவாக பெஞ்ச்களில் 6 உறுப்பினர்கள் அமரலாம், ஆனால் சமூக இடைவெளி காரணமாக 3 பேர் மட்டுமே அமர முடியும்.
நாடாளுமன்ற சபாநாயகருக்கு வலது புறம் உள்ள ட்ரஷரி பெஞ்ச்கள் உள்ள பக்கம் பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாம் இலக்கம் அடையாளமிடப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தார். இவருக்கு அடுத்த 2ம் எண் இருக்கையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அடுத்தபடியாக விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் அமர்ந்திருந்தனர்.
எதிர்க்கட்சியினர் அமரும் இடத்தில் முதல் இருக்கைகளில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அமர்ந்திருந்தனர்.
எதிர்க்கட்சியினர் அமரும் வரிசையில் 2வது வரிசையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா அமர்ந்திருக்கிறார்.
பிரதமர் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்ததும் கரகோஷம், ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்துடன் வரவேற்கப்பட்டார்.
மோடி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் சேர்த்து வணக்கம் தெரிவித்தார்.
அனைத்து உறுப்பினர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர். சிலர் முக ஷீல்டுகளையும் அணிந்திருந்தனர், இதில் திரிணமூல் எம்.பி.கல்யாண் பேனர்ஜியும் அடங்குவார்.
20 நிமிடங்கள் அவை கூடியது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் மறைந்த எம்.பி மற்றும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தியப் பிறகு ஒருமணி நேரம் அவை தள்ளி வைக்கப்பட்டது.