Published : 14 Sep 2020 06:41 AM
Last Updated : 14 Sep 2020 06:41 AM

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடுகிறது

கரோனா வைரஸ் தாக்கத்துக்கு நடுவே, நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கும். கரோனா வைரஸ் காரணமாக இக்கூட்டத்தொடர் தாமதமா னது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இக்கூட்டத் தொடர் வரும் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்படி முகக்கவசம், சமூக இடைவெளி ஆகிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கூட்டத் தொடருக்கு முன்பாக நடை பெறும் அனைத்துக் கட்சிக் கூட் டம் நடத்தப்பட மாட்டாது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று தெரிவித்தார். அதே நேரத்தில் மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று திட்டமிட்டபடி நடைபெறு கிறது.

நாடாளுமன்ற கூட்டத் தொட ரின்போது கேள்வி நேரம் இடம் பெறாது என்று ஏற்கெனவே அறி விக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் நாடாளுமன்ற அலு வலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள், அதிகாரி கள் அனைவருக்கும் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்படும் என்றும் அறிவிக் கப்பட்டுள்ளது. அதுமட்டுமல் லாமல் நாடாளுமன்ற எம்.பி.க் களின் வருகை தேசிய தகவல் மையம் (என்ஐசி) உருவாக்கி யுள்ள செல்போன் செயலி மூலம் பதிவு செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x