இந்தி திவஸ் நாளை கொண்டாட்டம்; சிறப்பு ஆவணப்படங்கள் ஒளிபரப்ப நடவடிக்கை

இந்தி திவஸ் நாளை கொண்டாட்டம்; சிறப்பு ஆவணப்படங்கள் ஒளிபரப்ப நடவடிக்கை
Updated on
1 min read

`இந்தி திவஸ் - 2020' அன்று அலுவல் மொழி பற்றிய திரைப்படங்களை திரைப்படப் பிரிவு ஒளிபரப்பவிருக்கிறது

இதுகுறித்து மத்திய திரைப்படப் பிரிவு தெரிவித்துள்ளதாவது:

1949 செப்டம்பர் 14 அன்று இந்திய அரசின் அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக்கொண்ட வரலாற்று நிகழ்வை நினைவு கூறும், நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட ஆவணப்படங்கள், குழந்தைகளின் மாதிரி அவைக் கூட்டம், பல்வேறு மாநிலங்களில் இந்தியின் வளர்ச்சி மற்றும் புகழை வெளிப்படுத்தும் பயணக் கட்டுரைகள் ஆகியவை 2020 செப்டம்பர் 14 அன்று இந்தி திவஸ் கொண்டாட்டங்களைக் குறிக்கும் விதமாக திரைப்படப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஐந்து இந்தி திரைப்படங்கள், 24 மணி நேரத்துக்கு இலவசமாக www.filmsdivision.org/DocumentaryoftheWeek மற்றும் https://www.youtube.com/user/FilmsDivision ஆகிய சுட்டிகளில் கிடைக்கும்.

இந்திய அரசியலமைப்பின் 343வது சட்டப்பிரிவின் படி தேவநாகரி எழுத்து முறையிலான இந்தி அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இன்றைக்கு உலகில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளில் ஒன்றாக உள்ள இந்தி, 520 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் முதல் மொழியாக உள்ளது.

இவ்வாறு மத்திய திரைப்படப் பிரிவு தெரிவித்துள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in