Published : 13 Sep 2020 08:13 AM
Last Updated : 13 Sep 2020 08:13 AM

பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களிடம் ரூ.42 ஆயிரம் கோடி மோசடி: உ.பி.யை சேர்ந்த 2 பேர் கைது

பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி ரூ.42 ஆயிரம் கோடி அளவில் நிதி மோசடி செய்ததாக தனியார் நிறுவன இயக்குநர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கார்வித் இன்னோவேட்டிவ் புரோமோட்டர்ஸ் நிறுவனம் இருசக்கரவாகன உற்பத்தியில் மாதாமாதம்நல்ல வருமானம் கிடைக்கும் எனக் கூறி ரூ.42 ஆயிரம் கோடி அளவில் நிதித்திரட்டிமோசடி செய்தது தெரியவந்துள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் இந்த நிதி திரட்டும் திட்டத்தைஇந்நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. 2019 ஜனவரியில் எலெக்ட்ரிக் பைக் முதலீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ரூ.1.24 லட்சம் முதலீடு செய்தால் மாதம்ரூ.17,000 வழங்குவதாகக் கூறியுள்ளது. அதேபோல ரூ.62,000 முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.9,500 வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.

இதில் நல்ல லாபம் கிடைத் ததால் பலரும் ஆர்வமாக முதலீடுசெய்துள்ளனர். ஆனால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு அவர்களுக்கான தொகையை சரிவர வழங்காமல் ஏமாற்றி உள்ளது. இதையடுத்து பலரும் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளனர். டெல்லியிலிருந்து மட்டும் சுமார் 8,000 புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டெல்லி காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் நிறுவனத்தின் இயக்குநர்கள் சஞ்சய் பாட்டி மற்றும் ராஜேஷ் பரத்வாஜ் ஆகியஇருவரும் கைது செய்யப்பட் டுள்ளனர்.

இந்நிறுவனம் நிதித் திரட்டுவது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் எந்தவித உரிமமும் பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது. எனவே, இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x