Last Updated : 23 Sep, 2015 09:33 AM

 

Published : 23 Sep 2015 09:33 AM
Last Updated : 23 Sep 2015 09:33 AM

அடித்து துன்புறுத்தியதாக மனைவி வழக்கு: சோம்நாத் பாரதியின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

தன்னை அடித்துத் துன்புறுத்திய தாகவும் கொலை செய்ய முயன்ற தாகவும் மனைவி வழக்கு தொடுத்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சோம்நாத் பாரதியின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமறை வான அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக நீதிபதி சுரேஷ் கைத் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா கூறியிருப்பவை மிகவும் கடுமை யான குற்றச்சாட்டுகள். குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 498-ஏ (திருமணமான பெண்ணுக்கு எதிரான கொடுமை), 406 (நம்பிக்கை துரோகம்), 307 (கொலை முயற்சி), 420 (மோசடி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. துன்புறுத்தல்களை லிபிகா சகித்துக் கொண்டிருந்துள்ளார். இதுதொடர் பாக 2013 மார்ச் 20-ம் தேதி, சோம்நாத் பாரதிக்கு லிபிகா அனுப்பிய இ-மெயில் ஆதாரமாக உள்ளது. எனவே பாரதியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாரதியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, கைது செய்வதற்காக போலீஸார் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

இதுகுறித்து டெல்லி மாநகர காவல் துறை இணை ஆணையர் (தென்மேற்கு) தீபேந்திர பதக் கூறும்போது, “மாளவியா நகர் தொகுதி எம்எல்ஏவான பாரதி தலைமறைவாக உள்ளார். அவரது செல்போனுக்கு தொடர்புகொள்ள முயன்றபோதும் பலன் அளிக்கவில்லை” என்றார்.

லிபிகா மித்ரா தனது கணவர் சோம்நாத் பாரதி மீது கடந்த ஜூன் 10-ம் தேதி டெல்லி மகளிர் ஆணையம், போலீஸில் புகார் செய்தார். 2010-ல் திருமணமானதி லிருந்து கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், கொல்ல முயன்றதாகவும் லிபிகா தனது புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி பாரதி மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக இவரது முன் ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றம் நிராக ரித்தது. சோம்நாத் பாரதிக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து அவரது வீடு, அலுவலகத்தில் போலீஸார் சோதனை நடத்திய தற்கு ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x