கேரளத்தில் கரோனாவால் குணமானவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியது

கேரளத்தில் கரோனாவால் குணமானவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியது
Updated on
2 min read

கேரளாவில் இன்று 2,885 பேருக்கு புதிதாகக் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் 1,944 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்று நோய் கண்டறியப்பட்டவர்களில், 2,640 பேர் உள்ளூர்த் தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. 287 பேருக்கு நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிய முடியவில்லை. 42 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் மற்றும் 137 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 55 சுகாதார ஊழியர்களும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலைக் கேரள அரசின் செய்தித் தொடர்புத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று செய்தித் தொடர்பு அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

''கரோனா வைரஸ் காரணமாக 15 மரணங்கள் இன்று உறுதி செய்யப்பட்டன. இறந்தவர்கள் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜோசப் (84) & வர்கீஸ் (58); திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாகவதி (78), ஜேம்ஸ் (76), பத்மநாபன் பாட்டி (101), ருஹியா பீவி (76), இஷா பீவி (72), விஜயலட்சுமி அம்மா (88); கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த கதிஷாபி (73), அப்துல் லத்தீப் (56), முகமது (67), பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஹம்சா (65), கதீஜா (45), எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மைதீன் (60), மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குட்டு (88). இது மாநிலத்தில் கரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கையை 425 ஆக அதிகரிக்கச் செய்துள்ளது. ஆலப்புழாவின் என்.ஐ.வி.யில் கூடுதல் சோதனைகளுக்குப் பிறகு மேலும் இறப்புகள் உறுதி செய்யப்படும்.

இன்று கரோனா உறுதிப்பட்டவர்களில் மாவட்ட வாரியான புள்ளி விவரங்கள்:

திருவனந்தபுரம் 566, மலப்புரம் 310, கோழிக்கோடு 286, கொல்லம் 265, கண்ணூர் 207, எர்ணாகுளம் 188, பாலக்காடு 184, திருச்சூர் 172, கோட்டயம் 166, ஆலப்புழா 163, காசர்கோடு 88 மற்றும் வயநாடு 54.

தொற்று தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:

திருவனந்தபுரம் 541, மலப்புரம் 286, கோழிக்கோடு 265, கொல்லம் 253, கண்ணூர் 190, திருச்சூர் 164, கோட்டயம் & எர்ணாகுளம் தலா 159, பாலக்காடு 157, காசர்கோடு 149, ஆலப்புலா 578 வயநாடு 48.

மாநிலத்தில் இன்று சுகாதாரத்துறை பணியாளர்கள் பாதிப்பு மாவட்ட வாரியாக:

திருவனந்தபுரம் 18, எர்ணாகுளம் 10, கொல்லம் 7, திருச்சூர் 6, கண்ணூர் 5, மலப்புரம் & கோழிக்கோடு தலா 3 பேர், ஆலப்புழா, பத்தனம்திட்டா, பாலக்காடு தலா ஒன்று. எர்ணாகுளம் மாவட்டத்தில் 11 ஐ.என்.எச்.எஸ் பணியாளர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று குணமான நோயாளிகளின் மாவட்ட வாரியான எண்ணிக்கை

திருவனந்தபுரம் 393, கொல்லம் 131, பதனம்திட்டா 54, ஆலப்புழா 146, கோட்டயம் 138, இடுக்கி 28, எர்ணாகுளம் 233, திருச்சூர் 135, பாலக்காடு 39, மலப்புரம் 201, கோழிக்கோடு 176, கோழிக்கோடு 176, கண்ணூர் 135, காசர்கோடு 104.

தற்போது வரை மாநிலத்தில் 75,848 பேர் கரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர், தற்போது, 28,802 நோயாளிகள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 2,03,300 பேர் வீடு அல்லது நிறுவனத் தனிமைப்படுத்தலின் கீழ் 1,81,123 பேர் மற்றும் மருத்துவமனைகளில் 22,177 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 2,576 பேர் இன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 43,954 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக உயர் வெளிப்பாடு குழுக்களிடமிருந்து 1,88,549 மாதிரிகள் உட்பட மொத்தம் 20,99,549 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 19 புதிய இடங்கள் இன்று ஹாட்ஸ்பாட்களாக வரையறுக்கப்பட்டன, 10 இடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இப்போது 603 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in