

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதியின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல், இதுதொடர்பாக படேல் சமூக எம்எல்ஏக்களை இன்று முதல் சந்திக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியா ளர்களிடம் ஹர்திக் படேல் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை முதல் படேல் சமுதாய எம்எல்ஏக்களை சந்திக்கவுள்ளோம். இதர பிற் படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரும் பிரச்சினையில் அவர்களின் நிலைப்பாடு அல்லது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அவர் களிடம் கேட்கவுள்ளோம். அகமதாபாத்திலிருந்து இதைத் தொடங்குகிறோம்.
எனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் அவர்களைச் சந்தித்து, பூ கொடுப்போம். இந்த சந்திப்பு வீடியோவாக பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குஜராத் சட்டப்பேரவையில் உள்ள 182 எம்எல்ஏக்களில் 35 பேர் படேல் சமூகத்தைச் சேர்ந்த வர்கள்.
முன்னதாக, இட ஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தின்போது, 10 பேர் உயிரிழந்தனர். இவர் களில், போலீஸ் காவலில் விசாரணையின்போது உயிரிழந் ததாகக் கூறப்படும் ஸ்வேதாங் படேல் (32) குடும்பத்தினரைச் சந்தித்து ஹர்திக் ஆறுதல் கூறி, அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். இப்போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தனது ஆதரவாளர்கள் நிதி திரட்டிக் கொடுக்க வேண்டும் என ஹர்திக் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
ஸ்வேதாங் படேலின் மரணம் குறித்து சிஐடி விசாரணைக்கு குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்வேதாங் படேலின் இரங்கல் கூட்டத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத்சிங் சோலங்கி, மூத்த தலைவர்கள் அர்ஜுன் மோத்வாடியா, சித்தார்த் படேல் ஆகியோரும் பங்கேற்றனர்.