

இந்தியாவில் கோவிட்-19 தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் 81,533 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்ததன் மூலம், ஒரே நாளில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் புதிய உச்சத்தை இந்தியா தொட்டுள்ளது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள், நாட்டின் 60 சதவீத குணமடைதல்களுக்கு காரணமாக உள்ளன.
மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் சுமார் 14 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவில் மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்து 36,24,196ஐ தொட்டுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 77.77 சதவீதமாக உள்ளது.