ராணுவத்தில் அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் ஒரேமாதிரி சத்துணவு , பதவி மூலம் நிர்ணயிக்கக் கூடாது: நிலைக்குழுவில் ஆஜரான பிபின் ராவத்திடம் ராகுல் காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
2 min read

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத், நேற்று பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜரானார்.

அப்போது ராணுவ வீரர்களுக்கு பதவியின் அடிப்படையில்தான் சத்துணவுகள் வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு குறித்து பேசிய ராகுல் காந்தி, பதவியின் தரத்தின் அடிப்படையில் சத்துணவுகளை எவ்வாறு வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள் தரமுள்ளதாகவும், சத்துள்ளதாகவும், போதுமானதாககவும் இருக்கிறதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது.

பாதுகாப்புத்துறைக்கான நிலைக்குழுக் கூட்டத்துக்கு பாஜக தலைவர் ஜூவல் ஓரம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுமுன் நேற்று தலைமை பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நிலைக்குழுவில் முதன்முதலாக ராகுல் காந்தி இந்தமுறைதான் நியமிக்கப்பட்டுள்ளார். நிலைக்குழுவில் நியமிக்கப்பட்டபின் முதல்முறையாக ராகுல்காந்தி கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

பாதுகாப்பு தலைமை அதிகாரி பிபின் ராவத் : கோப்புப்படம்
பாதுகாப்பு தலைமை அதிகாரி பிபின் ராவத் : கோப்புப்படம்

அப்போது என்சிபி தலைவர் சரத்பவார் பேசுகையில், “ கிழக்கு லாடாக்கில் நிலவும் சூழல், இந்திய சீன ராணுவத்துக்கு இடையே நடக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து விரிவான விளக்கத்தைக் கேட்டுள்ளார் “ என்று செய்திகள் தெரிவிக்கின்றன

சரத் பவார் கேட்ட கேள்விகளை குறித்துக்கொண்ட தலைமை பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத் விரிவான விளக்கம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கூட்டத்தில் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் வீரர்களின் ரேங்க் அடிப்படையில் அவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது என்று பிபின் ராவத்திடம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.

ஆனால், அதற்கு பதில் அளித்த பிபின் ராவத், “ சத்துணவுகள் வழங்குவதில் எந்தவிதமான வேறுபாடும் இ்லலை. வீரர்களுக்கு தனியாகவும், அதிகாரிகளுக்கு தனியாகவும் உணவுகள் இல்லை. உணவின் சுவை, பழக்கவழங்கள் அடிப்படையில் உணவு பரிமாறப்படுகிறது” எனத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி பேசுகையில் “எல்லையில் நாட்டை பாதுகாக்கும் பணியில் இருக்கும் வீரர்களுக்கு அதிகமான சத்துணவுகள் வழங்கப்படவேண்டும். அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதே சத்தான உணவுகள் வீரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

உணவு வழங்குவதில் எந்தவிதமான பாரபட்சமும் கூடாது. பதவி என்பது ஊதியத்தின் அடிப்படையில் வருகிறது, ஆனால் சத்துணவுகள் அவ்வாறு பிரிக்கக்கூடாது.

எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கு பல்வேறு சத்துள்ள உணவுகள் வழங்கப்பட வேண்டும். உணவின் தரத்திலும் எந்தவிதமான வேறுபாடும் இருக்கக்கூடாது” எனத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in