Published : 12 Sep 2020 08:25 AM
Last Updated : 12 Sep 2020 08:25 AM

உத்தவ் தாக்கரே குறித்த கார்ட்டூனை வாட்ஸ்-அப்பில் அனுப்பியவர் மீது தாக்குதல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள கன்டிவலி கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் மதன் சர்மா (65). கடற்படை முன்னாள் அதிகாரியான இவருக்கு அண்மையில் வாட்ஸ்-அப் செயலியில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்த கார்ட்டூன் வந்துள்ளது. இதை அவர் வேறு சிலருக்கு பகிர்ந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் மதன் சர்மா மீது நேற்று கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவிட்டது. இதுதொடர்பாக சாம்டா நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் தாக்கப்பட்ட காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

இதனிடையே சர்மாவை தாக்கியது சிவசேனாவைச் சேர்ந்த தொண்டர்கள்தான் என்று கன்டிவலி கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ அதுல் பட்கால்கர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை நடத்தியது சிவசேனாவின் ஒரு பிரிவான ஷாகா பிரமுக்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் மதன் சர்மாவின் கண்கள் பலத்த காயமடைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x