Published : 11 Sep 2020 02:26 PM
Last Updated : 11 Sep 2020 02:26 PM

இந்தியாவில் கரோனா பாதிப்பு:  குணமடைபவர்கள் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்வு 

இந்தியாவில் கரோனா பாதிப்பில் இருந்து தினசரி குணமடைபவர்களில் 60% பேர் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 35.5 லட்சம் ஆகும்.

இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 70,880 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் 14,000 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் ஆந்திராவில் ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,42,663 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 77.65%-மாக உள்ளது.

குணமடைந்தவர்களின் 60% பேர் மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில், 96,551 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் மகாராஷ்டிராவில் மட்டும் 23,000க்கும் மேற்பட்டோர்ரும், ஆந்திராவில் 10,000க்கும் மேற்பட்டோரும் அடங்குவர்.

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 57% பேர் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 60% பேர் குணமடைந்த அதே மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

நாட்டில் தற்போது மொத்தம் 9,43,480 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

2,60,000 பேருடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக கர்நாடகாவில் 1,00,000-க்கும் அதிகமானோர் உள்ளனர்.

சிகிச்சை பெறுபவர்களில் சுமார் 74% பேர், அதிகம் பாதிக்கப்பட்ட 9 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில், சிகிச்சை பெறுபவர்களில் 48%-க்கும் அதிகமானோர் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,209 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 495 பேரும், கர்நாடகாவில் 129 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 94 பேரும் உயிரழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x