

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாக் கட்சி தனக்கு இழைக்கும் துன்பங்களை கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிப்பதும், அலட்சியமாக இருப்பதும் சரியல்ல என்று நடிகை கங்கனா ரணாவத் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு காங்கிரஸ் உடன் கூட்டணி உள்ளது. இந்நிலையில் இந்த அரசு பெண்ணுக்கு எதிராகச் செய்யும் அவதூறு, குற்றச்செயல்களை பார்த்தும் பார்க்காதது போல் காங்கிரஸ் தலைமை இருந்தால் வரலாறு இவர்களுக்கு தீர்ப்பளிக்கும் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணாவத் ட்வீட்டில் கூறியதாவது: “மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய காங்கிரஸ் தலைவராகிய சோனியா காந்தி அவர்களே ஒரு பெண்ணாக உங்கள் பங்கு உள்ள மகாராஷ்ட்ரா ஆட்சி எனக்கு இழைக்கும் கொடூரங்கள் உங்களை கவலைப்படச் செய்யவில்லையா?
டாக்டர் அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசன உயரிய கொள்கைகளை கடைப்பிடிக்க உங்கள் அரசுக்கு நீங்கள் அறிவுறுத்த மாட்டீர்களா?
நீங்கள் மேலை நாட்டில் வளர்ந்து இந்தியாவில் வாழ்கிறீர்கள். பெண்களின் துயரங்கள் உங்களுக்குத் தெரியும். உங்கள் அரசு என்னைப் போன்ற பெண்ணை துன்புறுத்துவது பற்றிய உங்கள் மவுனத்தையும், அலட்சியத்தையும் பற்றி வரலாறு தீர்ப்பளிக்கும். சட்டம் ஒழுங்கை மகாராஷ்டிர அரசு கேலிக்கூத்தாக்கி வருகிறது. நீங்கள் தலையிடுவீர்கள் என்று நம்புகிறேன்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகே பாலிவுட் பற்றிய அவரது கருத்துக்கள் தலைப்புச் செய்தியாக்கப்பட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் இவருக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. மும்பையை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருடன் அவர் ஒப்பிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளதோடு, சிவசேனாவை வெகுவாகச் சீண்டியது. மும்பையி இவரது சொத்து ஒன்றை இடிக்க மும்பை கார்ப்பரேஷன் நடவடிக்கையை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தின் சாதகத் தீர்ப்பையும் பெற்றார் கங்கனா.
என்ன அறிவிலித்தனமான கல்வியறிவற்ற செயல்: பழங்குடி ஆஸி. கிரிக்கெட் வீரரை தூற்றிய நெட்டிசன்களுக்கு ஆஸி. வாரியம் கண்டனம்