

இந்தியாவின் முக்கிய 10 இலக்கியங்களை ரஷ்ய மற்றும் சீன மொழிகளில் மொழி பெயர்க்க மத்திய கலாச்சார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2020 செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற 17-வது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கலாச்சார அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பகிர்ந்துகொள்ளப்படும் புத்த பாரம்பரியத்தைப் பற்றிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் முதலாம் கண்காட்சியை ஏற்பாடு செய்யும் பணிகளில் இந்திய தேசிய அருங்காட்சியகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
ரஷ்ய மற்றும் சீனம் ஆகிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மொழிகளில் 10 இந்திய இலக்கியங்களை சாகித்ய அகாடமி மொழிமாற்றம் செய்து வருவதாக படேல் கூறினார். இந்திய இலக்கியங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.