Last Updated : 11 Sep, 2020 12:14 PM

 

Published : 11 Sep 2020 12:14 PM
Last Updated : 11 Sep 2020 12:14 PM

மே மாத தொடக்கத்திலேயே இந்தியாவில் 64 லட்சம் பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம்: ஐசிஎம்ஆர் செரோ சர்வே தகவல்

இந்தியாவில் மே மாதத்தின் தொடக்கத்திலேயே 64 லட்சம் பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கக்கூடும். இந்தியாவில்0.73 சதவீதம் இளைஞர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஐசிஎம்ஆர் நடத்திய தேசிய அளவிலான நோய்க்கிருமித் தொற்று ஆய்வு(செரோ சர்வே) தெரிவிக்கிறது.

'இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்' எனும் பத்திரிகையில் ஐசிஎம்ஆர் தேசிய அளவிலான முதல் செரோ சர்வே ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தற்போது 45 லட்சம் பேர் மட்டுமே இந்தியாவில் கரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளதாக பரிசோதனையின் அடிப்படையில் மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால், “செரோபிரிவேலன்ஸ்” எனப்படும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட மக்கள் தொகையில் தனிநபர்களைப் பாதித்துள்ள கிருமித் தொற்றின் அடிப்படையில் மே மாதத்திலேயே இந்தியாவில் 64 லட்சம் பேருக்கு கரோனா தொற்று இருந்திருக்கக்கூடும் என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவருகிறது.

தேசிய அளவிலான செரோசர்வே கடந்த மே 11ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதிவரை 28 ஆயிரம் தனிநபர்களின் ரத்த மாதிரிகளை கோவிட் கவாச் எலிஸா கிட் மூலம் பரிசோதித்தது.

நாடுமுழுவதும் 70 மாவட்டங்களில் உள்ள 700 நோய்த் திரள் பகுதியில் 4 அடுக்குகளில் 30 ஆயிரத்து 283 வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் 25 சதவீதம்பகுதிகள் நகர்ப்புற பகுதிகளில் உள்ள நோய்திரள் பகுதிகள். இந்த ஆய்வில் பங்கேற்ற 28 ஆயிரம் பேரில் 48.5 சதவீதம் பேர் 18 வயது முதல் 45 வயதுள்ளவர்கள், 51.5 சதவீதம் பேர் பெண்கள். 18.7 சதவீதம் பேர் நோய் தொற்றுக்கு அதிகமான வாய்ப்புள்ள பகுதிகளில் பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில் 18 வயது முதல் 45 வயதுள்ளோரில் அதிகபட்சமாக 43.3 சதவீதம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியிருந்தார்கள். அடுத்ததாக 46 வயது முதல் 60 வயதுள்ளவர்கள் 39.5 சதவீதம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர், அடுத்ததாக 60வயதுக்கு மேற்பட்டோர் 17.2 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இதன் மூலம் மே மாதத் தொடக்கத்திலேயே இந்தியாவில் 64 லட்சத்து 68 ஆயிரத்து 388 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவில் “செரோபிரிவேலன்ஸ்” (நோய்த்தொற்று தனிநபர் விகிதப் பரவல்) எனப்படும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட மக்கள் தொகையில் தனிநபர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்று குறைவாக இருந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மே மாதம் நடுப்பகுதியில் இந்தியாவில் உள்ள வயதுவந்தோர் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான மாவட்டங்களில் நோய் தொற்று குறைவாக இருந்ததால், ஆய்வு நடத்தப்பட்ட காலத்தில் இந்தியா தொற்றின் தொடக்க கட்டத்தில் இருந்திருக்கும். இருப்பினும் இந்திய மக்களில் பெரும்பாலானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள், சார்ஸ் கோவிட்-1 வைரஸுக்கு இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஆட்படுவார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் மே-ஜூன் மாதங்களுக்கு இடையில் கரோனா வைரஸ் கிராமப்புறங்களுக்கும் பெருமளவில் பரவியுள்ளது, என்கிறது இந்த ஆய்வு.

கரோனா அறிகுறிகள் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை நடத்தி, பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியை தனிமைப்படுத்தப்பகுதியாக அறிவிக்க வேண்டும், கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும், தீவிரமான பாதிப்புக்கு ஆளாகும் வயதினரைக் கண்டுபிடித்து அவர்களுக்கு பரிசோதனை செய்வதன் மூலம் கரோனா தொற்றின் வேகத்தைக் குறைக்க முடியும், சுகாதாரத்துறையினருக்கு எதிர்காலத்தில் அதிகமான சுமை வராமல் தடுக்க முடியும்.

இந்த ஆய்வு நடத்தப்பட்ட மாவட்டங்களை வகைப்படுத்தும்போது, 0.62 சதவீதம் முதல் 1.03 சதவீதம் வரை நோய் தொற்றின் தாக்கம் இருந்தது. அதாவது 15 மாவட்டங்களில் நோய்தொற்று இல்லை, 22 மாவட்டங்களில் குறைந்த அளவு தொற்று, 16 மாவட்டங்களில் நடுத்தரமாக நோய் தொற்று, 17 மாவட்டங்களில் அதிமாகன அளவில் பாதிக்கப்பட்டோர் இருந்தனர்.

ஏப்ரல்-மே மாதங்களில் லாக்-டவுன் நடைமுறையில் இருந்தும் நகரங்களில் தொற்று அதிகமாக இருந்த வேளையில் பெரிய அளவில் நகரங்களைத் தாண்டியும் கரோனா தொற்று பரவியதை இந்த ஆய்வு காட்டுகிறது.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் ஜூன் 14ம் தேதியன்று மே மாத தொடக்கத்திலேயே சில மாவட்டங்களில் 7 லட்சம் பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டது. இது அதிகாரப்பூர்வ கரோனா தொற்று எண்ணிக்கை குறித்தத் தகவலை விட 20 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x