Last Updated : 04 May, 2014 10:10 AM

 

Published : 04 May 2014 10:10 AM
Last Updated : 04 May 2014 10:10 AM

செய்தியாளர் சந்திப்பு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை: பாஜக

“பத்திரிகையாளர் சந்திப்பு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை” என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.

பா.ஜ.க. சார்பில் அதன் ஒருங் கிணைப்பாளர் ராமகிருஷ்ணா தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஓட்டுப் போட்டுவிட்டு வெளியில் வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பத்திரிகையாளர்கள் இடைமறித்து பேசினர். இது, திட்டமிடப் பட்டோ, முன் ஏற்பாடு களுடன் நடந்த சந்திப்பு அல்ல. தற்செயலாக நடந்த சந்திப்பு. ஆனால், சட்டத்தை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களை ஓட்டுப் போடும் இடத்திற்கு வரவிடாமல் தடுக்க வேண்டியது உள்ளூர் தேர்தல் அதிகாரிகளின் கடமை. குறிப்பாக முக்கிய நபர்கள் வரும்போது இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு அளிக்க வேண்டியது தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பு.

மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்து தேர்தல் நன்னடத்தை விதிகளில் எந்த கட்டுப்பாடும் விதிக்கப் படவில்லை. இதுகுறித்து தெளிவான விதிமுறைகளை வகுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. தேர்தல் ஆணையத்தின் தற்போதைய விதிமுறை பொதுக்கூட்டம் நடத்து வதை மட்டுமே தடை செய்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பு, விளக்கம் அளித்தல், கட்சித் தொண்டர்கள் கூட்டம் குறித்து எந்த கட்டுப் பாடும் இல்லை. இதற்கு கட்டுப் பாடு விதிக்கும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட வில்லை. இதில் மாற்றம் கொண்டு வரும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு. பிரதமர் மன்மோகன் சிங், அமர்தியா சென் போன்றோர்கூட ஓட்டுப் போட்டுவிட்டு வரும்போது பாஜக தலைவர்களை விமர்சித்துள்ளனர். எனவே, மோடி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி மீது புகார்

முன்னதாக, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சோலன் என்ற இடத்தில் ராகுல் காந்தி பேசியபோது, “தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 22,000 பேர் இறந்துள்ளனர். ஐ.மு.கூட்டணி ஆட்சியில் 800 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளது குறித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x