

அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டால் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வேறுநாடுகளிலிருந்தும் பக்தர்கள், சுற்ற்ய்லாப் பயணிகள் வரத்து அயோத்தியில் அதிகம் இருக்கும் என்று உத்தரப் பிரதேச அரசு அதற்குத் தயாராகி வருகிறது.
இதனையடுத்து விமானநிலையத்துக்கு கடவுள் ராமர் பெயர் சூட்டவும், அதற்கு பன்னாட்டு அந்தஸ்து வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2021-ல் விமான நிலையம் தயாராகி விடும் என்று உ.பி. அரசு நம்பிக்கை வைத்துள்ளது.
மாநில அரசு செய்தி தொடர்பாளர் கூறும்போது, “அயோத்தியில் ராமர் கோவில் கட்டியவுடன், பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும். அதனால், விமான நிலையம் அமைக்கும் பணிகளை, அடுத்த ஆண்டுக்குள் முடிக்க கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு, கடவுள் ராமர் பெயரை வைக்கவும், அதற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, மாநில அரசு, விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விரைவில் சமர்பிக்கும்.” என்றார்.