Last Updated : 10 Sep, 2020 10:53 AM

 

Published : 10 Sep 2020 10:53 AM
Last Updated : 10 Sep 2020 10:53 AM

உத்தரப் பிரதேசத்தில் கடன் தொல்லையால்  விவசாயி தற்கொலை

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாண்டாவில் பிந்தரன் என்ற கிராமத்தில் கடன் சுமையினால் விவசாயி ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

38 வயதான ராம் நரைன் செவ்வாய்க் கிழமையன்று இந்த துயர முடிவுக்கு வந்து விஷம் அருந்தினார், புதன் கிழமை சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

தற்கொலை செய்து கொண்ட ராம் நரைனின் சகோதரர் வித்யாசாகர் இது தொடர்பாக போலீஸில் கூறும்போது, “4 ஆண்டுகளுக்கு முன்பாக ராம் நரைன் ரூ.2.5 லட்சம் வங்கியிலிருந்து கடன் வாங்கினார்.

மேலும் தன் வயலில் கிணறு தோன்அவும் ரூ.2 லட்சம் உறவினர்களிடமிருந்து கடன் வாங்கினார். அவரால் கடனைத் திருப்பி அளிக்க முடியவில்லை.

இதனால் மனமுடைந்த ராம் நரைன் தற்கொலை செய்து கொண்டார்” என்று தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பாக மாவட்ட துணைப்பிரிவு மேஜிஸ்ட்ரேட் மகேந்திர பிரதாப் சிங், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் தெரியவில்லை, ‘சம்பவ இடத்துக்கு விசாரணை செய்ய குழு ஒன்றை அனுப்பியுள்ளேன்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x