Published : 09 Sep 2020 07:10 AM
Last Updated : 09 Sep 2020 07:10 AM

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் பணமோசடி வழக்கில் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐசிஐசிஐ வங்கிக்கும் வீடியோகான் நிறுவனத்துக்கும் இடையே முறைகேடான பரிவர்த்தனைகள் மூலம் பண மோசடி நடந்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வங்கித் துறையில் பெரிதும் புகழப்பட்ட சிஇஓ சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் தீபக் கோச்சார் அமலாக்கத் துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்குவதில் உதவியதற்காக சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்துக்கு வேணுகோபால் தூத் பணம் வழங்கியுள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கு தீபக் கோச்சார் ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறியுள்ள அமலாக்கத் துறை அதன் காரணமாக அவரை கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

மேலும் கோச்சார் தரப்பின் ரூ.78 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத் துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ.வாக இருந்த போது வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி வரை முறைகேடாக கடன் வழங்கியுள்ளார். இதில் குறிப்பிட்ட அளவு கடன் வாராக்கடனாக மாறியுள்ளது. இதையடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதில் கடன் வழங்கியதற்காக வீடியோகான் நிறுவனத்திடம் இருந்து தீபக் கோச்சாரின் நுபவர் நிறுவனத்துக்கு ரூ.325 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.

ரூ.75 கோடியில் வீடு

இதன் அடிப்படையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் முறைகேடாகக் கடன் வழங்கியதற்காக சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சாருக்கு மும்பையில் உள்ள ரூ.75 கோடி மதிப்புள்ள குடியிருப்பு ஒன்றை வீடியோகான் குழுமம் வழங்கியுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.தீபக் கோச்சார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x