அரிசி உணவு சாப்பிட்டால் நீரிழிவு நோய் வர வாய்ப்பு: புதிய ஆய்வில் தகவல்

அரிசி உணவு சாப்பிட்டால் நீரிழிவு நோய் வர வாய்ப்பு: புதிய ஆய்வில் தகவல்

Published on

‘பிராஸ்பெக்டிவ் அர்பன் ரூரல் எபிடெமியாலஜி’ ஆய்வின் ஒரு பகுதியாக, 21 நாடுகள் இணைந்து ஒரு சர்வதேச ஆய்வை நடத்தின.

10 ஆண்டுகளில் 21 நாடுகளைச் சேர்ந்த 1,32,373 பேர் அரிசி உணவை எடுத்துக் கொண்டது பற்றி ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். சீனா, இந்தியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 35 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

இந்த ஆய்வின் முடிவில், தெற்கு ஆசியாவில் அரிசியை அடிப்படையாகக் கொண்ட உணவை அதிகம் சாப்பிட்டவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற பிராந்தியங்களில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நடுத்தரமாக இருந்தது. இந்த ஆய்வு முடிவு ‘டயபெட்ஸ் கேர்’ இதழில் வெளியாகி உள்ளது.

ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு நடத்திய ஆய்வில், தினமும் ஒரு கப் சாதம் சாப்பிட்டவர்களில் 11 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு இருந்தது தெரிய வந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in