Last Updated : 08 Sep, 2020 06:27 PM

 

Published : 08 Sep 2020 06:27 PM
Last Updated : 08 Sep 2020 06:27 PM

கங்கனா ரனாவத் போதை மருந்து பயன்படுத்திய புகார் குறித்து மும்பை போலீஸார் விசாரிப்பர்: அமைச்சர் அறிவிப்பு: எதற்கும் தயார்: கங்கனா பதிலடி

பாலிவுடன் நடிகை கங்கனா ரனாவத் போதை மருந்து பயன்படுத்தினார் என்று ஆத்யாயன் சுமன் அளித்த புகாரைத் தொடர்ந்து அவரிடம் மும்பை போலீஸார் முறைப்படி விசாரனை நடத்துவார்கள் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.

நடிகர் சேகர் சுமனின் மகனும் நடிகருமான ஆத்யாயன் சுமன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கங்கனா ரனாவத்துடன் தனக்கு பழக்கம் இருந்தது என்றும், அவர் போதை மருந்து பயன்படுத்தும் போது எனக்கும் வலுக்கட்டாயமாக போதை மருந்தை பயன்படுத்த பழக்கப்படுத்தினார் என்று ஆத்யாயன் சுமன் தெரிவித்திருந்தார்.

நடிகை ரேகா சக்ரவர்த்தி போதை மருந்து பயன்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டு, போதை மருந்து தடுப்பு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஆத்யாயன் சுமனின் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா, மும்பை குறித்து கடுமையாக விமர்சித்து பேசியதைத் தொடர்ந்து சிவேசனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனாவத்துக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் வெடித்தது.

இந்த மோதல் விவகாரம் மகாராஷ்டிரா சட்டப்பேரவையிலும் இன்று எதிரொலித்தது. மகாராஷ்டிரா சட்டப்ரேரவையில் சிவசேனா எம்எல்ஏக்கள் பிரதாப் சர்நாயக், சுனில் பிரபு ஆகியோர் பேசும்போது, கங்கனா ரனாவத் போதைப்பொருள் பயன்படுத்தினார், அதை ஆத்யாயன் சுமனுக்கும் வலுக்கட்டாயமாக வழங்கியதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதில் அளிக்கையில் “ இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்துவார்கள். மும்பை போலீஸார் குறித்து கங்கனா ரனாவத் பேசியவை பொறுப்பற்ற பேச்சு.

வேறுஒரு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிழைப்புக்காக மும்பை வந்துள்ளார், அவரை மும்பையும் அன்புடன் ஏற்றுக்கொண்டது. ஆனால், அவர் மும்பை போலீஸாரை அவமானப்படுத்தியுல்ளார்.
இது வேதனைக்குரியது. கங்கனா பேசவை பொறுப்பற்றவை. மகாராஷ்டிராவை அவமானப்படுத்தினால், மக்கள் பொறுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள்.

மகாராஷ்டிரா பாஜகவுக்கும் சொந்தமானது என்பதை நினைவூட்டுகிறேன், அனைத்துக் கட்சிகளும் இதைக் கண்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.” எனத் தெரிவித்தார்.

மேலும், மும்பை போலீஸார் குறித்து அவதூறாகப் பேசிய நடிகை கங்கனா ரனாவத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதத்தையும் உள்துறை அமைச்சரிடம் சர்நாயக் எம்எல்ஏ வழங்கினார்.

கூட்டத்தொடர் முடிந்து வெளியே வந்த உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ நடிகை கங்கனா ரனாவத் போதைப் பொருட்கள் பயன்படுத்தினார், தன்னையும் பயன்படுத்தக் கூறி கட்டாயப்படுத்தினார் என ஆத்யாயன் சுமன் கூறியது குறித்து மும்பை போலீஸார் கங்கானாவிடம்விசாரணை நடத்துவார்கள்" எனத் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கங்கநா விவகாரத்தை எழுப்பிய சிவசேனா எம்எல்ஏ சர்நாயக் அளித்த பேட்டியில், “ அரசியல் பழிவாங்கல் நோக்கில் இந்த விவகாரத்தை எழுப்பவில்லை. சட்டம் அனைவருக்கும் சமமானது. இதில் அரசியல் பழிவாங்கல் இல்லை.

கங்கனா மீது போதைப் பொருள் புகார் வந்துள்ளதுஅவரிடம் போலிஸார் விசாரிக்கப் போகிறார்கள். அவர் பயன்படுத்தியது உண்மையென்றால், சிறைக்கு போவார், அது தவறான குற்றச்சாட்டு என்றால் அவரைவிட்டுவிடுவார்கள்” எனத் தெரிவித்தார்.

கங்கனா ரனாவத் பதில்

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அறிவிப்புக்கு பதில் அளித்து நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் “ மும்பை போலீஸார், அமைச்சர் அனில் தேஷ்முக் ஆகியோர் கடமையைச் செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு போதை மருந்து பரிசோதனை நடத்துங்கள். என்னுடைய செல்போனில் யாருடன் பேசினேன் என்று கண்டுபிடியுங்கள்.

நான் போதை மருந்து பயன்படுத்துவோருடன் தொடர்பில் இருந்தால்,நான் எனது தவறை ஒப்புக்கொள்கிறேன், மும்பைவிட்டு செல்கிறேன். உங்களை சந்திக்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x