

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்தைக் கடந்துள்ளது, அதேசமயம், கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 133 பேர் கரோனாவில் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 75 ஆயிரத்து 809 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 42 லட்சத்து 80 ஆயிரத்து 422 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்ைதயும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் கரோனா எண்ணிக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் தொடர்ந்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை 90 ஆயிரமாக தொற்று அதிகரித்தது. இந்நிலையில், கரோனா தொற்று நேற்று 75 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
இதில் நம்பிக்கையளிக்கும் விதமாக கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 23 ஆயிரத்து 950 ஆக அதிகரித்து, 77.65 சதவீதமாக உயர்ந்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 83 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20.95 சதவீதமாக உள்ளனர்.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,133 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு, 72 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை 5 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரத்து 128 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 98 ஆயிரத்து 621 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 423 பேர் உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 27 ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைபெற்்று வருவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 37 ஆயிரத்து 292 ஆக அதிகரி்த்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 89 பேர் உயிரிழந்தநிலையில் மொத்த உயிரிழப்பு 7 ஆயிரத்து 925 ஆக அதிகரி்த்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவில் நேற்று மட்டும் 32 பேர் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,599 ஆக அதிரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 543 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் நேற்று 15 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு 3,120 ஆக அதிரித்துள்ளது.
கரோனாவில் 16,482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் கரோனாவில் 97 ஆயிரத்து 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று 141 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த எண்ணிக்கை 6,534 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,133 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கரோனாவில் 97,932 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அங்கு நேற்று மட்டும், 70 பேர் உயிரிழந்ததைதயடுத்து, 4,487 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.