

ராஜஸ்தான் மாநிலத்தில், மூடப் பட்ட சுரங்கத்தை மீண்டும் இயக்குவதற்காக கோடிக்கணக் கில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் சிங்வி மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநில சுரங்கங் கள் துறை முதன்மைச் செயலாளர் அசோக் சிங்கி. அனுமதி ரத்து செய்யப்பட்ட சுரங்கங்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குவதற்காக ரூ. 2.55 கோடி லஞ்சம் பெற்றதாக, அம்மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக உதய்ப்பூர், பில்வாரா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார். 3.8 கோடி லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது. இதில், ரூ.2.55 கோடி அசோக் சிங்வி மற்றும் துறை அதிகாரிகள் 2 பேருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அசோக் சிங்வி, அவரது ஆடிட்டர் ஷியாம் சிங் சிங்வி, இடைத்தரகர் சஞ்சய் சேத்தி, உதய்பூர் சுரங்கத்துறை கூடுதல் இயக்குநர் பங்கஜ் கெலாட், பில்வாரா முதுநிலை சுரங்க பொறியாளர் அமேதா, சுரங்க உரிமையாளர் ஷெர்கானின் உதவியாளர் ரஷீத்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளின்போது ரூ.4 கோடியே 25 லட்சம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், லஞ்சம் வாங்கியதாக ஊழல் தடுப்புப் பிரிவு கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால், அசோக் சிங்வி, சுரங்கத்துறை கூடுதல் இயக்குநர் பங்கஜ் கெலாட், பில்வாரா முதுநிலை சுரங்கப் பொறியாளர் பி.ஆர். அமேதா ஆகியோர் பணி யிடை நீக்கம் செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
சுரங்கத்துறையை, கூட்டுறவுத் துறை செயலாளர் தீபக் உப்ரேதி கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.