

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் நேற்று ஸ்ரீநகரில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும் முன்பு போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
கடந்த 19-ம் தேதி, சோப்பூர் மாவட்டம், சகிபோரா என்ற இடத்தில் முன்னாள் தீவிரவாதி ஒருவரும் அவரது 19 வயது மகனும் அவர்களின் வீட்டுக்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் பட்டனர்.
இதை கண்டித்து உண்ணா விரதம் இருக்க திட்டமிட்ட யாசின் மாலிக், நேற்று ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியை நோக்கி தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டார். இந்நிலையில் இவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், யாசிக் மாலிக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற் பட்டோரை வாகனங்களில் ஏற்றி, கொத்திபாக் காவல் நிலையத்தில் அடைத்து வைத் தனர்.
யாசின் மாலிக் செய்தியாளர் களிடம் கூறும்போது, “சோப்பூர் மாவட்ட படுகொலையை கண்டித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க திட்ட மிட்டிருந்தோம். அமைதி வழியிலான எங்கள் போராட் டத்தை படை பலத்தை பயன் படுத்தி அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விட்டனர். இந்தப் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தினால் மட்டுமே குற்ற வாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.