

2022-ல் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் 24 மணிநேர மின்விநியோக வசதி இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடிய பிரதமர் கூறியதாவது:
2022-ம் ஆண்டு இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அப்போது அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் மின்சார வசதி இருக்கும்.
நாட்டில் 18,000 கிராமத்தில் மின்சாரம் கிடையாது. அடுத்த 1,000 நாட்களில் இந்த கிராமங்கள் அனைத்துக்கும் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியை எடுத்துள்ளோம், என்றார்.