

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிலக்கரித் துறை இணை அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியாவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
சிபிஐ நீதிபதி பரத் பராஷர் பக் ரோடியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மகாராஷ்டிர மாநிலம் பந்தர் நிலக்கரிச் சுரங்கத்தை ஏஎம்ஆர் அயர்ன் அன்ட் ஸ்டீல் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பக்ரோடியா, முன்னாள் நிலக்கரித் துறை செயலாளர் எச்.சி.குப்தா மற்றும் நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் அதிகாரி எல்.எஸ்.ஜனோதி ஆகியோர் ஏஎம்ஆர் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது.