Last Updated : 26 Sep, 2015 09:49 AM

 

Published : 26 Sep 2015 09:49 AM
Last Updated : 26 Sep 2015 09:49 AM

சுவாமி தயானந்த சரஸ்வதியின் உடல் நல்லடக்கம்

ஆன்மிக குரு சுவாமி தயானந்த சரஸ்வதியின் உடல், உத்தரா கண்ட் மாநிலம், ரிஷிகேஷ் நகரில் உள்ள அவரது ஆசிரமத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கோவை ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிறுவனமும் உலகளவில் பிரசித்தி பெற்ற வேதாந்த போதகருமான சுவாமி தயானந்த சரஸ்வதி (85), ரிஷிகேஷில் உள்ள அவரது ஆசிரமத்தில், கடந்த புதன்கிழமை இரவு காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நேற்று நடைபெற்றன. இதையொட்டி தென்னிந்திய வைதீக முறைப்படி சிறப்பு அபிஷேகங்கள் நேற்று காலை ஏழு மணிக்கு தொடங்கி சுமார் 3 மணி நேரம் நடைபெற்றன. இதற்காக தமிழகத்தில் இருந்து 5 வேத பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இறுதிச் சடங்குகளுக்கு பின் ஆசிரமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகங்காதரேஷ்வர் கோயில் அருகே சுவாமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 16-ம் நாள் சடங்குகளுக்குப் பிறகு அன்னதானம் செய்யப்பட்டு இந்த இடத்தில் அவரது உருவச்சிலை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிச் சடங்கில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் பல ஆயிரம் சீடர்களுடன் விஎச்பி தேசிய பொதுச்செயலாளர் அசோக் சிங்கால், ஆர்எஸ்எஸ் நிர்வாகி தத்தாத்ரேயா ஹோசபல்ஸ், பாஜக தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான ராம் மஹாதேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தென்னிந்தியா உட்பட பல்வேறு மாநிலங்களின் எம்பிக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த ஆசிரமத்தின் நிர்வாக அறங்காவலரான சாந்தமானந் சுவாமிகள் இறுதி ஏற்பாடு களை செய்திருந்தார். பின்னர் இவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சுவாமி தயானந்த சரஸ்வதியின் பணிகளை தொடர்ந்து மேற் கொள்வோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x