

மந்திராலயத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராகவேந்திரரின் 344வது ஆராதனை மஹோத்சவத்தை முன்னிட்டு நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2006ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மந்திராலயத்தில் உள்ள சத்குரு ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலுக்கு ஆராதனை மஹோத்சவத்தை முன்னிட்டு ஏழுமலையானின் சேஷ பட்டு வஸ்திரம் காணிக்கையாக அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 344வது ஆராதனை மஹோத்சவத்தை முன்னிட்டு நேற்று திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், சேஷ பட்டு வஸ்திரங்களை தலைமீது தூக்கி வந்தபடி மந்திராலய நிர்வாகிகளிடம் காணிக்கையாக வழங்கினார்.