Published : 06 Sep 2020 08:42 AM
Last Updated : 06 Sep 2020 08:42 AM

‘சிப்’களை பொருத்தி பெட்ரோல் பங்க்குகளில் மோசடி ஆந்திராவில் 26, ஹைதராபாத்தில் 13 பங்குக்கு ‘சீல்’

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க் குகளில் ‘சிப்’களை பொருத்திமோசடி செய்வது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 39 பெட்ரோல் பங்க்குகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் விநியோகத்தில் மோசடி நடைபெறுவதை மாவட்ட போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அந்த மாவட்டதில் உள்ளஅனைத்து பெட்ரோல் பங்க்கு களிலும் சோதனை மேற்கொண்டதில் 3 பெட்ரோல் பங்க்குகளில் எலக்ட்ரானிக் சிப்களை பொருத்தி மோசடி செய்தது தெரியவந்தது.

பெட்ரோல், டீசல் விநியோகம்செய்யப்படும் இயந்திரத்தில்எலக்ட்ரானிக் ‘சிப்’பை பொருத்துவதன் மூலம் 1000 மி.லிக்கு (ஒரு லிட்டர்) 40 முதல்70 மி.லிட்டர் வரை குறைத்து விநியோகிக்கும். ஆனால், வெளியில் அந்த இயந்திரம் ஒரு லிட்டர் விநியோகித்ததாகவே வாடிக்கையாளருக்கு காண்பிக்கும். இதுபோன்று வாடிக் கையாளருக்கு தெரியாமல்கொள்ளையடித்துள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக போலீஸார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது என்பவரிடமிருந்து ‘சிப்’பை ரூ.60 ஆயிரத்திற்கு வாங்கியதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஹைதராபாத் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சைபராபாத் காவல் துறை ஆணையர் உத்தரவின் பேரில் நேற்று சைபராபாத் முழுவதும் உள்ள பங்க்குகளில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அங்கு 13 பெட்ரோல் பங்க்குகள் இதுபோன்று ‘சிப்’கள் பொருத்தி மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த 13 பங்க்குகளுக்கும் போலீஸார் ‘சீல்’ வைத்தனர். இது தொடர்பாக 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான முகமது தலைமறைவாகி உள்ளதால் அவரைதேடும் பணி தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டத் தைத் தொடர்ந்து நெல்லூர், சித்தூர், விஜயவாடா, குண்டூர் ஆகிய மாவட்டங்களிலும் சிலபெட்ரோல் பங்க்குகளில் இதுபோன்று நூதன மோசடி நடப்பதுதெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஆந்திராவில்இதுவரை 26 பெட்ரோல் பங்க்குகளுக்கு சீல் வைக்கப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதைத்தொடர்ந்து ஆந்திரா, தெலங்ஸ்ரீகானா ஆகிய 2 மாநிலங்களிலும் உள்ள அனைத்து பங்க்குகளிலும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடைக் குறைவை மக்களே பரிசோதிக்கலாம்

எடைக் குறைவு குறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறிய தாவது: பெட்ரோல், டீசல் அளவு குறைவாக இருப்பதாகவோ அல்லது கலப்படம் இருப்பதாகவோ வாடிக்கையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டால், தொடர்புடைய பெட்ரோல் பங்க்கில் புகார் செய்ய வேண்டும். பங்க் உரிமை யாளர்கள் அவற்றை பரிசோதித்துக் காண்பிக்க வேண்டும். அல்லது வாடிக் கையாளர்களே அவற்றை சோதித்துப் பார்க்கலாம். இதற்கான பரிசோத னைக் கருவிகள் அனைத்து பெட்ரோல் பங்க்குகளுக்கும் வழங்கப் பட்டுள்ளன.

மேலும், பெட்ரோல் பங்க்குகளில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனை இயந்திரங்கள், எண்ணெய் நிறுவனத்தில் உள்ள கணினியுடன் இணைக் கப்பட்டுள்ளன. இதனால், விற்பனையாளர் ஏதாவது மோசடி செய்தால், அதை கணினி காட்டிக் கொடுத்து விடும். இதுதவிர, எண்ணெய் நிறுவன விற்பனை அதிகாரிகள் 3 மாதத்துக்கு ஒருமுறை அனைத்து பெட்ரோல் பங்க்குகளுக்கும் நேரில் சென்று அங்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் அளவு, தரம் ஆகியவற்றை பரிசோதனை செய்வர். தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்படும் எடை மற்றும் முத்திரை பிரிவு சார்பிலும் ஆண்டுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விற்பனை இயந்திரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x