500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அளிக்கிறது கூகுள்

500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அளிக்கிறது கூகுள்
Updated on
1 min read

நாட்டிலுள்ள 500 ரயில் நிலையங்களில் வைஃபை (அதிவேக இணையதள வசதி) வசதி வழங்குகிறது கூகுள் நிறுவனம்.

அமெரிக்காவின் சிலிக்கான்வேலியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறும்போது, "தகவல்களை அறிந்து கொள்வதில் இந்திய மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். அதனால் இந்தியாவில் கூகுள் பிரபலமாக உள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் குஜராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இயங்கும் அளவுக்கு ஆண்டிராய்டு இயங்குதளம் மேம்படுத்தப்படும்.

இந்திய ரயில்வே எப்போதுமே என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. நாளொன்றுக்கு 2.5 கோடி மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறையும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டது இப்போதும் எனது நினைவில் பசுமையாக உள்ளது.

100 இந்திய ரயில் நிலையங்களில் கூகுள் சார்பில் அதிவேக இணையதள வசதி அளிக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 400 ரயில் நிலையங்களில் இணைய வசதி ஏற்படுத்தப்படும்" என்றார் சுந்தர் பிச்சை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in