

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் முதல் நாளான இன்று பாஜக மூத்த அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த்குமார், சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக தலைவர் அமித் ஷாவும் வந்திருந்தார்.
ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல், ராணுவத்தில் ஒரே பதவி வகிப்பவருக்கு ஒரே பென்ஷன் வழங்குவது, படேல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த மூன்று நாள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
பிரதமர் மோடியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.