தேசிய கல்விக் கொள்கை எதிர்காலத்தை நோக்கி குழந்தைகளைத் தயார்படுத்தும்: குடியசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்

தேசிய கல்விக் கொள்கை எதிர்காலத்தை நோக்கி குழந்தைகளைத் தயார்படுத்தும்: குடியசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
Updated on
1 min read

தேசிய கல்விக் கொள்கை எதிர்காலத்தை நோக்கி குழந்தைகளைத் தயார்படுத்தும் என குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கை குழந்தைகளை எதிர்காலத்தை நோக்கித் தயார்படுத்தும் என்றார்.

கல்வி அமைப்பில் செய்யப்படும் மாற்றங்களில், ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று ஆசிரியர்களை குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய கல்விக் கொள்கைப்படி கற்பித்தல் தொழிலில், மிகவும் நம்பிக்கைக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராம் நாத் கோவிந்த் கூறினார்.

ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி உரையாற்றிய குடியரசுத் தலைவர், கோவிட் சமயத்தில் டிஜிட்டல் கல்வி மூலம் குழந்தைகளை எதிர்காலத்துக்குத் தயார்படுத்தியதற்காகவும், தேசிய கல்விக் கொள்கையை மாணவர்களுக்கு எடுத்து செல்வதற்காகவும் அவர்களைப் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in