

ஆந்திர மாநில அறநிலையத் துறையுடன் இணைந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிராமணர் அல்லாதவர்களுக்கு கோயிலில் அர்ச்சர்களாக பணிபுரிய பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளோட்டமாக ஆந்திர மாநிலத்தில் இரு மாவட்டங்கள் இப்பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயி லில் ஆகம விதிகளின்படி வேத பாடங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வேத பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மூலம் நற்சான்றி தழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, திருப்பதி தேவஸ் தானம் சார்பில் பழங்குடியினத் தவர்களுக்கு, குறுகிய காலமாக 3 மாதத்தில் வேத பாடங்கள் கற்று தரும் திட்டமும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனை தற்போது தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் என விரிவாக்கம் செய்து, முழு நேர பாடத்திட்டத்தில் கற்றுத் தர உள்ளனர்.
புதிய கோயில்கள்
இது குறித்து ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாணிக்கியால வரபிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது,
‘‘பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அறநிலையத்துறை மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இணைந்து அர்ச்சகர் பணிக்காக வேத பாடசாலையில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்.ஆந்திர மாநிலத்தில், கோயில் இல்லாத ஊர்களில் கோயில்கள் கட்டி, பயிற்சி முடித்த இளைஞர் களை அர்ச்சகர்களாக பணியில் அமர்த்த முடிவெடுக்கப் பட்டுள்ளது’’ என்றார்.
முழு நேர அர்ச்சகர் பயிற்சி
ஏற்கெனவே திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ‘தலித் கோவிந்தம்’ எனும் பெயரில் உற்சவ மூர்த்திகளை தலித் இனத்தவர் வசிக்கும் பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதில் தலித் இனத்தவர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். ஆனால் இது ஏனோ கைவிடப்பட்டது. தற்போது திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகத்தில் பிராமணர் அல்லாதவர்களுக்கு முழு நேர அர்ச்சகர் பயிற்சி அளிக்க தேவஸ்தானம் முன் வந்துள்ளது.
இரு மாவட்டங்கள்
இந்த பயிற்சிக்கான வெள் ளோட்டமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர், மேற்கு கோதாவரி மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 100 மாணவர்கள் முதற்கட்டமாக சேர்க்கப்பட உள்ளனர். இவர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். பின்னர் ஆகம விதிகளின்படி இவர் களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற மாணவர்கள், மற்ற கோயில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றலாம். திருமண முகூர்த்தம் குறிப்பது உள்ளிட்ட பல சாஸ்திரங்கள், மந்தி ரங்கள் இவர்களுக்கு கற்றுத் தரப்பட உள்ளது.