

ஆசிரியர்கள் தினத்தன்று ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஆசிரியர்கள் தினமான இன்று ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனுக்கும் அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், மாணவர்களின் மனங்களைச் செம்மைப்படுத்துவதிலும், நமது தேசத்தைக் கட்டமைப்பதிலும் ஆசிரியர்களின் பங்களிப்புக்கும், அவர்களின் கடின உழைப்புக்கும் நாம் நன்றியுடன் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தினமான இன்று, ஆசிரியர்களின் சிறந்த முயற்சிகளுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனுக்கு அவரது பிறந்த நாளன்று அஞ்சலி செலுத்துகிறோம் என்றார்.
"நமது நாட்டின் பெருமைமிகு வரலாற்றுடனான நமது இணைப்பை நமது அறிவுமிகுந்த ஆசிரியர்கள் தவிர வேறு யாரால் பலப்படுத்த முடியும்? சமீபத்திய மனதின் குரல் நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் அறியப்படாதவர்களைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்குமாறு ஆசிரியர்களுக்கு நான் யோசனை கூறியிருந்தேன்," என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.