Published : 05 Sep 2020 12:33 PM
Last Updated : 05 Sep 2020 12:33 PM

எல்லையில் தற்போதைய பதற்ற நிலைக்கு இந்தியாதான் பொறுப்பு  : ராஜ்நாத் சிங்கிடம் கூறிய சீன பாதுகாப்பு அமைச்சர் 

எல்லையில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு இந்தியாதான் ஒட்டுமொத்த பொறுப்பு என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கி தெரிவித்தார்.

மேலும் சீனா தன் பகுதியில் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்காது என்று அவர் கூறியதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன அரசு ஊடகமான ஷின்ஹுவா ஏஜென்சி அவர் கூறியதாக மேற்கோள் காட்டி கூறிய போது, எல்லை விவகாரத்தில் சமீபகாலமாக இருநாடு மற்றும் இருநாட்டு ராணுவங்கள் இடையேயான உறவுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் முகத்துக்கு முகம் நேர் கொண்டு சந்தித்து சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும், என்று கூறியதாக தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகளில் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கி, கடந்த வாரம் இந்தியா மீது சாற்றிய குற்றச்சாட்டுகளை மீண்டும் எழுபியதாகத் தெரிகிறது. புதன் கிழமையன்று சீனா தரப்பில், “இந்தியத் தரப்பில்தான் முழு பொறுப்பும் உள்ளது” என்று கூறியிருந்தது. மேலும் இந்தியாதான் பதற்றத்துக்குக் காரணம் என்று கூறி இந்திதன் தன் படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரத்தில் கூறிய போது ஆகஸ்ட் 31ம் தேதி சீன படைகள் தூண்டும் விதமாக நடந்து கொள்கின்றன என்று குற்றம்சாட்டியது.

சீனாவின் இத்தகைய எல்லை படை முன்னேற்றத்தை அடுத்து இந்தியா ‘தன் நிலைகளை வலுப்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொண்டது’

இந்நிலையில் ஜெனரல் வெய், “சீன-இந்திய எல்லையில் நடப்பு பதற்றங்களின் காரணமும் உண்மையும் தெளிவாகத் தெரிகிறது. முழுப்பொறுப்பும் இந்தியத் தரப்பில் தான் உள்ளது, சீனாவின் ஒரு அங்குல இடத்தை கூட இழக்க நாங்கள் தயாராக இல்லை. சீன ராணுவத்திடத்தில் இறையாண்மையை பாதுகாக்கவும் பிராந்திய ஒருங்கிணைப்பை பராமரிக்கவும் திறமை உள்ளது.

இருதரப்புகளும் அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடியிடையே ஏற்பட்ட கருத்தொற்றுமை அடிப்படையில் பரஸ்பர பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை இந்தியா தீவிரமாகப் பின்பற்றும் என்று நம்புகிறோம். சூழ்நிலை உஷ்ணமாகும் எந்தச் செயலையும் இந்தியா செய்யக் கூடாது. அல்லது வேண்டுமென்றே சூழ்நிலையை ஊதிப்பெருக்கி எதிர்மறைத் தகவல்களைப் பரப்பாமல் இருக்க வேண்டும்.

இருதரப்பும் சீனா-இந்தியா இடையேயான் ஒட்டுமொத்த உறவுகள், பிராந்திய அமைதி , ஸ்திரத்தன்மை ஆகிய நலன்களுக்காக பாடுபட வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நடப்பு சூழ்நிலையின் இறுக்கத்தை இருதரப்பினரும் தளர்த்த வேண்டும். சீன இந்திய எல்லையில் அமைதியும் சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

-மூலம்: தி இந்து ஆங்கிலம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x