Published : 05 Sep 2020 08:43 AM
Last Updated : 05 Sep 2020 08:43 AM

இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு மகாராஷ்டிராவில் வாழ உரிமை இல்லை: அமைச்சர் அனில் தேஷ்முக் சர்ச்சை பேச்சு

மும்பை

நடிகை கங்கனா ரணாவத்துக்கு மகாராஷ்டிராவில் வாழ உரிமைஇல்லை என அமைச்சர் அனில்தேஷ்முக் சர்ச்சைக்குரிய வகை யில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சடலம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சுஷாந்தின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகை கங்கனா பேசி வருகிறார். இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்ட பலர் மீதும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

இதனிடையே, மர்ம நபர் ஒருவர் கங்கனா உள்ளிட்ட சிலரின் பெயர்களைக் குறிப்பிடாமல் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்திருந்தார். இந்த கருத்தை மும்பை காவல் துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் லைக் செய்திருந்தது. இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் பகிர்ந்திருக்கும் நடிகை கங்கனா ‘‘சுஷாந்தின் கொலைக்கு எதிராகப் போராடி வருபவர்களை அவதூறாகப் பேசும் கருத்துகளை மும்பை காவல் துறை லைக் செய்துள்ளது. இதைவிட மோசமான நிலைக்கு மும்பை காவல் துறை இறங்கிவிட முடியாது” என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் கங்கனாவை அவதூறாக எழுதி இருந்தார். இதையடுத்து கங்கனா வெளி யிட்டுள்ள ட்விட்டில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தன்னை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டி யுள்ளார். மும்பையை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீரைப் போலவே கருதுகிறேன் என்றும் கங்கனா கூறினார்.

இதுதொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக் நேற்று கூறும்போது, ‘‘மும்பை காவல் துறையை ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருடன் ஒப்பிடலாம். மும்பை போலீஸாரை குற்றம்சாட்டும் கங்கனா மும்பையிலோ அல்லது மகாராஷ்டிராவிலோ வாழ உரிமை இல்லை’’ என்றார்.

இதுகுறித்து கங்கனா ட்விட்டர் பக்கத்தில், "மும்பைக்கு வரக் கூடாது என பலர் மிரட்டுகின்றனர். எனவே, நான் வரும் 9-ம் தேதிமும்பைக்கு செல்வேன். முடிந்தால் என்னை தடுக்கட்டும்" என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x