

நீதிபதி அருண் மிஸ்ரா பிரிவு உபசார விழாவில் தன்னை பேச அனு மதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவே குற்றம் சாட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா கடந்த புதன்கிழமை ஓய்வு பெற்றார். காணொலி வாயிலாக அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான இணைய இணைப்பும் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் விழாவில் பேச விடாமல் தனது 'மைக்ரோபோன்' அணைக்கப்பட்டதாக துஷ்யந்த் தவே குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, "நீதிபதி அருண் மிஸ்ரா பிரிவு உபசார விழாவில் பேச விடாமல் வேண்டுமென்றே தடுத்தனர். இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்" என்று தெரி வித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப் டேவுக்கும், அவர் கடிதம் அனுப் பியுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த்பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரித்து அவரை குற்றவாளியாக தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக துஷ்யந்த் தவே கருத்து தெரிவித் திருந்தார்.
இதன்காரணமாகவே நீதிபதி அருண் மிஸ்ரா பிரிவு உபசார விழாவில் அவரை பேசவிடாமல் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.