

கரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 30 லட்சத்தை கடந்தது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை என்னும் மத்திய அரசின் உத்தியின் மூலம் இந்தியாவில் குணமடைதல் விகிதம் அதிகமாகவும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.
அதிக அளவிலான கொரோனா நோயாளிகள் தொடர்ந்து குணமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைக் (30,37,151) கடந்துள்ளது.
சர்வதேச சராசரியுடன் ஒப்பிடும் போது இறப்பு விகிதிம் இந்தியாவில் குறைவாக இருக்கும் நிலையில் (தற்போதைய நிலவரப்படி 1.74%), வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெறுவோரின் விகிதம் மிகக் குறைந்த அளவில் மட்டுமே உள்ளது (0.5 சதவீதத்துக்கும் கீழ்).
இரண்டு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 3.5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே பிராண வாயு இணைப்புள்ள படுக்கைகளில் உள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.