Last Updated : 07 Sep, 2015 02:20 PM

 

Published : 07 Sep 2015 02:20 PM
Last Updated : 07 Sep 2015 02:20 PM

ஆசிரியர்களுக்காக மொபைல் ஆப்: ம.பி.-யில் அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக தம் மாநில ஆசிரியர்களுக்காக ஒரு 'மொபைல் ஆப்' மத்தியப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

'எம் ஷிக்ஷா மித்ரா (கைபேசி கல்வி நண்பன்)' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப், அவர்களுக்கு பணி நிமித்தமான விஷயங்களில் உதவியாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் மூலமாக ஆசிரியர்கள் தம் சம்பள ரசீது, பல்வேறு அமைப்புகள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிதி, மாணவர்களுக்கான உதவித்தொகை, சுற்றரிக்கைகள் உட்படப் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

'கூகுள் பிளே ஸ்டோர்'-ல் உள்ள இந்த ஆப்-ஐ ஆசிரியர்கள் தம் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம், மபி மாநிலத்தின் பள்ளி ஆசிரியர்கள், தொடர்புடைய அதிகாரிகள் ஆகியோரின் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதன்மூலம் அவர்களுடன் மாதம் ஒன்றுக்கு 200 குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த ஆப் இல் மேலும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மபியின் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர், பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் முதல்வர்கள் அனைவரும் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தம் எண், முகவரி ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x