ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நாளை உரையாடுகிறார்

ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நாளை உரையாடுகிறார்
Updated on
1 min read

ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நாளை உரையாடுகிறார்.

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் 4 செப்டம்பர், 2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் திக்ஷந்த் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) பயிற்சி அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாடவிருக்கிறார்.

28 பெண் பயிற்சி அலுவலர்கள் உட்பட 131 இந்திய காவல் பணி பயிற்சி அலுவலர்கள் 42 வாரங்களுக்கான அடிப்படை பாடத்தின் பகுதி ஒன்றை அகாடமியில் முடித்துள்ளனர்.

ஐஏஎஸ், ஐஎப்எஸ் போன்ற இதர சேவைக்குத் தேர்வானவர்களுடன் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி, முசோரியிலும், டாக்டர் மர்ரி சென்னா ரெட்டி மனித வள மேம்பாட்டு நிறுவனம், ஹைதரபாத், தெலங்கானாவிலும் ஆரம்பப் பயிற்சியை முடித்த பின்னர், 17 டிசம்பர் 2018 அன்று சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் இவர்கள் இணைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in