

கேரளாவில் இன்று 1,547 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''இன்று தொற்று கண்டறியப்பட்டவர்களில் 1,419 பேர் தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 156 பேருக்குத் தொற்றின் மூலத்தைக் கண்டறிய முடியவில்லை. அவர்களில் 21 பேர் வெளிநாடுகளிலிருந்தும் 65 பேர் பிற மாநிலங்களிலிருந்தும் திரும்பி வந்துள்ளனர். 36 சுகாதாரப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், இந்த நோய்க்குச் சிகிச்சையளிக்கப்பட்ட 2,129 நோயாளிகள் குணமடைந்து இன்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை புதிய தொற்றில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் தொடர்ச்சியான இரண்டாவது நாள் இது.
மாநிலத்தில் சமீபத்தில் ஏழு இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்படி கரோனா இறப்பு எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்கள் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அபுபக்கர் (60), திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓமனகுட்டன் (63), சில்வம்மா (80), பாலச்சந்திரன் நாயர் (63) மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த நபீசா பீரன் (75), பேபி ஜார்ஜ் (60) மற்றும் சதானந்தன் (57). ஆலப்புழாவின் என்.ஐ.வி.யில் அடுத்தடுத்த சோதனைகளுக்குப் பிறகு மேலும் இறப்புகள் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று உறுதிப்பட்டவர்களின் மாவட்ட வாரியான புள்ளி விவரம்:
திருவனந்தபுரம் 228, கோழிக்கோடு 204, ஆலப்புழா 159, மலப்புரம் 146, கோட்டயம் 145, கண்ணூர் 142, எர்ணாகுளம் 136, திருச்சூர் 121. காசர்கோடு 88, கொல்லம் 81, வயநாடு 38, பாலக்காடு 30, பத்தனம்திட்டா 17, இடுக்கி 12 பேர்.
தொடர்பு மூலம் தொற்று ஏற்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரங்கள்:
திருவனந்தபுரம் 211, கோழிக்கோடு 196, கோட்டயம் 143, மலப்புரம் 134, ஆலப்புழா 131, எர்ணாகுளம் 122, கண்ணூர் 121, திருச்சூர் 116, காசர்கோடு 85, கொல்லம் 77, வயநாடு 31, பாலக்காடு 24, பத்தனம்திட்டா 16 மற்றும் இடுக்கியில் 12 பேர்.
தொற்று ஏற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் விவரம்:
திருவனந்தபுரத்தில் 16 சுகாதாரப் பணியாளர்கள், மலப்புரம் மாவட்டத்தில் ஐந்து பேர், எர்ணாகுளம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தலா மூன்று பேர், கொல்லம், ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தலா இரண்டு பேர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா இரண்டு பேர் ஆவர்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆறு ஐ.என்.எச்.எஸ் ஊழியர்கள் உள்ளனர்.
இன்று குணமான நோயாளிகளின் மாவட்ட வாரியான விவரம்:
திருவனந்தபுரம் 402, கொல்லம் 85, பத்தனம்திட்டா 112, ஆலப்புழா 288, கோட்டயம் 69, இடுக்கி 42, எர்ணாகுளம் 119, திருச்சூர் 100, பாலக்காடு 98, மலப்புரம் 317, கோழிக்கோடு 194, வயநாடு 26, கண்ணூர் 127 மற்றும் காசர்கோடு 150 பேர்.
இதுவரை மாநிலத்தில் 55,782 பேர் கோவிட் நோயால் குணப்படுத்தப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 21,923 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 1,93,736 பேரில் 1,75,382 பேர் தங்கள் வீடுகளில் அல்லது நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ளனர். 18,354 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். 1,439 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 23,850 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக உயர் வெளிப்பாடுக் குழுக்களிடமிருந்து 1,79,862 மாதிரிகள் உட்பட மொத்தம் 17,24,658 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இன்று 13 புதிய ஹாட்ஸ்பாட்கள் உள்ளன, 17 இடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது 577 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.