கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கரோனா தொற்றால் பாதிப்பு

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் : கோப்புப்படம்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் : கோப்புப்படம்
Updated on
1 min read

கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவ்ந்த் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், வீ்ட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 78 ஆயிரத்து 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு 37 லட்சத்து 69 ஆயிரத்து 523 ஆக அதிரித்துள்ளது. 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் கரோனா தாக்கம் குறையவில்லை.

கரோனாவில் மாநில முதல்வர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாதிக்கப்படும் நிலையும் இருந்து வருகிறது.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான், கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா ஆகியோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், கஜேந்தி சிங் ஷெகாவத் உள்பட பல்வேறு மத்திய அமைச்சர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நலம் அடைந்தனர்.

இந்நிலையில், கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறி இல்லாமல் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பிரமோத் சாவந்த் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு அறிகுறி இல்லாமல் கரோனா தொற்று இருப்பதால், நான் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து எனது பணிகளைக் கவனிப்பேன்.
என்னுடன் கடந்த சில நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத்

தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளவும் எனக் கேட்டுக்கொள்கிறேன் “ எனத் தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தில் தற்போது 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனற், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். 194 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in