

இ்ந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை 37 லட்சத்தை நெருங்கியுள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் புதிதாக 69 ஆயிரத்து 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 36 லட்சத்து 91 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 7-ம் தேதி 20 லட்சத்தை எட்டிய நோய்தொற்று 23-ம் தேதி 30 லட்சத்தை எட்டியது. அடுத்த 8 நாட்களில் 7 லட்சத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆறுதல் தரும் வகையி்ல் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்து 39 ஆயிரத்து 882 ஆக அதிரித்துள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 76.94 ஆகஉயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 85 ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21.29 சதவீதம் மட்டும்தான்.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 819 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 65 ஆயிரத்து 288 ஆக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பு 1.77 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 184 பேர் உயிரிழந்தனர். அடுத்ததாக கர்நாடகாவில் 113 பேர், தமிழகத்தில் 91 பேர், ஆந்திராவில் 85 பேர், உத்தரப்பிரதேசத்தில் 63 பேர், மேற்கு வங்கத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப்பில் 49 பேர், மத்தியப்பிரதேசத்தில் 20 பேர், டெல்லியில் 18 பேர், குஜராத்தில் 14 பேர், ராஜஸ்தானில் 13 பேர், உத்தரகாண்டில் 12 பேர், அசாம், ஒடிசா, திரிபுராவில் தலா 10 பேர் உயிரிழந்தனர்.
கோவா, தெலங்கானா, ஜம்மு காஷ்மீரில் தலா 9 பேர் சத்தீஸ்கரில் 8 பேர், ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளா, புதுச்சேரியில் தலா 7 பேர், பிஹார், சண்டிகரில் தலா 4 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 3 பேர், அந்தமான் நிகோபரில் ஒருவர் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை 4 கோடியே 33 லட்சத்து 24 ஆயிரத்து 834 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 16 ஆயிரத்து 920 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 184 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 24 ஆயிரத்து 583ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 94ஆயிரத்து 399 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 91 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7,322 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 52 ஆயிரத்து 578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 14 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,444ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 15 ஆயிரத்து 524 பேர் சிகிச்சையில் உள்ளனர். 14 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 3,020 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 87,254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 113 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 5,702ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 23,553 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் ஒரு லட்சத்து 26 பேர் சிகிச்சையில் உள்ளனர். 85 பேர் நேற்று பலியானதையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,969 ஆக அதிரித்துள்ளது.
தெலங்கானாவில் 31 ஆயிரத்து 699 பேர் சிகிச்சையில் உள்ளனர். அங்கு நேற்று மட்டும் 10 பேர் பலியானதையடுத்து, உயிரிழப்பு 836 ஆக அதிகரித்துள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது