உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் பரிந்துரை

உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் பரிந்துரை
Updated on
1 min read

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதி களாக ஆதர்ஷ் குமார் கோயல், அருண் மிஸ்ரா, கோபால் சுப்பிரமணியம், ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமை யிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் நியமனக் குழு, இப்பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றதும், இம்மாத இறுதியில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்.

ஆதர்ஷ் குமார் கோயல் (60)

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் குமார் கோயல், தற்போது ஒடிசா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். பஞ்சாப் மற்றும் ஹரியாணா, குவாஹாட்டி உயர்நீதிமன்றங் களில் பணியாற்றி உள்ளார். ஹரியாணா மாநிலம் சார்பில் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப் படும் முதல் நீதிபதி இவர்.

அருண் மிஸ்ரா (58)

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அருண் மிஸ்ரா, கொல் கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2012-ம் முதல் பணியாற்றி வருகிறார். நீதிபதி தீபக் வர்மா 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்ற பின், உச்ச நீதிமன்றத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் சார்பில் எந்த நீதிபதியும் இல்லாத நிலையில், அக்குறையை அருண் மிஸ்ரா போக்குவார்.

ரோஹின்டன் நாரிமன் (58)

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நாரிமன், பார்ஸி சமூகத் தைச் சேர்ந்தவர். கடந்த 93-ம் ஆண்டு 37-வது வயதில் மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர். இவருக்காக அப் போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வெங்கடாசலய்யா, குறைந்தபட்ச வயதான 45-ஐ திருத்தி நாரி மனுக்கு அனுமதி அளித்தார். 2011-ம் ஆண்டு சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந்துள்ளார்.

கோபால் சுப்பிரமணியம் (56)

தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட கோபால் சுப்பிர மணியம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரித்த வர்மா குழு விசாரணையில் வழக்கறிஞராக பணியாற்றியவர். ஒடிசாவில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ பிரச்சாரகர் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் கொலை குறித்த வாத்வா விசாரணைக் குழுவிலும் இடம்பெற்றவர். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் வழக்கில் நீதிமன்றத்துக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின், வழக்கறிஞராக உள்ள இருவர் நேரடியாக நீதிபதியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு முன், 99-ம் ஆண்டு சந்தோஷ் ஹெக்டே நேரடியாக நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்். உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறை யாக 1964-ம் ஆண்டு எஸ்.எம்.சிக்ரி நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in