

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 512 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், பாதிப்பு எண்ணிக்கை 36 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் வருமாறு:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 512 கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 36 லட்சத்து 21 ஆயிரத்து 246 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 110 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், 10 லட்சத்தை 59 நாட்களில் எட்டியது. 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் பாதிப்பை 21 நாட்களிலும், 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் பாதிப்பை 16 நாட்களிலும் எட்டியுள்ளது.
கடந்த 5 நாட்களில் மட்டும் 5 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7-ம் தேதி 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23 நாட்களில் 15 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பாதிப்பு ஒருபக்கம் மோசமாக இருந்தாலும், ஆறுதல் அளிக்கும் வகையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 74ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 81 ஆயிரத்து 975 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 971 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 64 ஆயிரத்து 469
ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 296 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 106 பேர் தமிழகத்தில் 94 பேர், ஆந்திராவில் 88 பேர் உத்தரப்பிரதேசத்தில் 67 பேர் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் மொத்தம் 4,23,07,914 மாதிரிகள் மொத்தம் பரிசேதானை செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 846278 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது