

பெங்களூருவில் 13-வது மாடியில் இருந்து, இஷா ஹன்டா (26) என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுந்து இறந்த சம்பவத்தில், அப்பெண் அதற்கு முன்பாக ‘எளிய முறையில் தற்கொலை செய்து கொள்வது எப்படி?’ என 89 இணைய தளங்களில் தேடியிருப்ப தாக போலீஸார் தெரிவித்தனர்.
மஹாராஷ்டிர மாநிலம் தானே-வை சேர்ந்த இஷா ஹன்டா. பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் சர்ஜாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 13-வது மாடியில் இருந்து விழுந்து இறந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக போலீஸார் வட்டாரங்கள் கூறும்போது, “இஷா உயிரிழந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு நண்பர்களோ, உறவினர்களோ யாரும் இல்லை. சிசிடிவி கேமரா பதிவான காட்சியில் மாலை 6 மணியளவில் இங்கு வந்துள்ளார். இஷா உயிரிழந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட பையில் போதை மாத்திரைகளும், 250 கிராம் கஞ்சாவும் இருந்தன. அவரது செல்போனை ஆராய்ந்த போது, இறப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பிருந்து 89 இணையதளங்களில், ‘எளிய முறையில் தற்கொலை செய்து கொள்வது எப்படி?’ என தேடியுள்ளார். மேலும் இஷா வாடகைக்கு கார் மூலம் பெங்களூருவில் உயரமான கட்டிடங்களை தேடியுள்ளார். இந்த இடத்தில் ஆள் நடமாட்டமும், பாதுகாப்பு கெடுபிடிகளும் குறைவாக இருந்ததால் இதை தேர்ந்தெடுத்துள்ளார். எனவே இது தற்கொலையாக இருக்கலாம்” என்றனர்.